Nov 9, 2024 - 11:16 AM -
0
தெல்தோட்டை நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சிலிண்டர் சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது.
இதன் போது கருத்த தெரிவித்த அவர்,
இன்று நாங்கள் பார்க்கின்ற போது இந்த கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் எங்கும் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள். இருந்தால் பல்வேறுபட்ட வேட்பாளர்களும் முகம் தெரியாத வேட்பாளர்கள் தமிழர் பிரதேசங்களை முற்றுகை இட்டு பிரசாரம் செய்வதை காண்கின்றோம்.
பிரசாரம் செய்தால் பரவாயில்லை ஆனால் எங்களுடைய மக்களுக்கு சிறு சிறு சலுகைகளை அல்லி கொடுப்பதன் மூலமாக எங்கள் மக்களின் வாக்குகளை அள்ளி கொண்டு போகலாம் என அலைந்து திரிவதை காணக் கூடியதாக இருக்கின்றது.
ஆகவே அன்பாக நாங்கள் கேட்கின்றோம். தெளிவாக நாங்கள் சொல்லுகின்றோம். வாக்கு என்பது எங்களின் உரிமை, அது எங்களின் வாழ் உரிமை ஆகவே சலுகைக்கு எங்களது வாக்குகளை நாங்கள் கொடுத்து விட்டு எங்களது உரிமையை இழந்து விட கூடாது என்பதை இந்த இடத்திலே மிகதெளிவாக குறிப்பிடுகின்றோம்.
தேர்தல் காலத்திற்க்கு கூட்டம் கூட்டமாக வந்து சிறு சலுகையை கொடுத்து தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளை பெறலாம் என்ற என்னத்திலே அலைகின்ற வேட்பாளர்களுக்கு நீங்கள் தகுந்த பாடத்தை படிப்பித்து எங்களது உரிமை வாக்கு உரிமை என்பதை காட்டி சரியான முறையில் சிலிண்டர் சின்னத்தில் உள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு அளிப்பதன் மூலமாக கண்டி மண்ணிலே தமிழ் மக்களின் உடைய அந்த பெருமையை எடுத்து கூற வேண்டும் என தெரிவித்தார்.
--