உலகம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி!

Nov 9, 2024 - 12:22 PM -

0

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி!

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

 

குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட இன்று குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05