Nov 9, 2024 - 01:43 PM -
0
நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதலாவது T20 போட்டி இன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது இன்றி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நியூசிலாந்து அணி 13 போட்டிகளிலும் இலங்கை அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையே சமீபத்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.