செய்திகள்
திலித்திடமிருந்து இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றம்

Nov 9, 2024 - 02:09 PM -

0

திலித்திடமிருந்து இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றம்

இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான தெரிவை மக்கள் மேற்கொள்ளும் வாய்ப்பை சர்வஜன அதிகாரம் உருவாக்கியுள்ளதாக அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.


பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்று (09) காலை காலி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,


"இந்த வாய்ப்பு உருவாக ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே ஆகியுள்ளது. நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது ஒரு கிராம சேவகரைக் கூட எங்களுக்குத் தெரியாது. இன்று நாம் ஒரு பெரிய முகாமைக் கொண்டுள்ளோம், ஒரு பரவலான தொடர்பைக் கொண்டு செயற்படுகிறோம்."


"22 மாவட்டங்களிலும் போட்டியிடுகிறோம். எல்லா இடங்களிலும் சிறந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றத்தை கொண்டுவர உங்களுக்கு ஒரு உண்மையான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது."

Comments
0

MOST READ
01
02
03
04
05