செய்திகள்
பல்கலைக்கழகங்கள் இரண்டு நாட்களுக்கு பூட்டு

Nov 9, 2024 - 07:10 PM -

0

பல்கலைக்கழகங்கள் இரண்டு நாட்களுக்கு பூட்டு

எதிர்வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

அத்துடன், அரசுப் பல்கலைக்கழகங்களின் கீழ் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை  ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

மே 31, 2006க்கு முன் பிறந்த 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, உயர்தர மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்காக மேலதிக வகுப்புக்களை ஒழுங்கு செய்யுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05