Nov 10, 2024 - 11:16 AM -
0
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் விமல் ரத்தநாயக்க மற்றும் பலாலி வடக்கு மக்களுடனான சந்திப்பு நேற்று (09) காலை ஆரோக்கிய மாதா ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவிக்கையில்,
நாட்டிலே பல்வேறு வகையான பிரச்சனைகள் இருந்து வருகின்றன வடக்கு பகுதியில் மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் இவற்றை கடந்த அரசாங்கம் அவற்றை நிவர்த்தி செய்யவில்லை.
தற்போது உலகளாவிய ரீதியிலே விவசாயம் மீன்படி உள்ளிட்ட பல துறைகளுக்கு நவீன இயந்திரங்கள் மூலம் இலகுவான தொழில் முயற்சிகள் இடம்பெறுகின்றன ஆனால் எமது பகுதியில் எதுவும் இல்லை கருவாடு பதப்படுத்தும் நிலையம் கூட இல்லாம கவலைக்குரிய விடயமாகும்.
எனவே இனிவரும் காலங்களிலே விவசாயத்தையும் மேம்படுத்துறையும் ஏனைய பொருளாதார விடயங்களையும் முன்னெடுத்து செல்வதற்கு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் ஊடாக பல்வேறு அவர் திட்டங்களை முன் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.
யாழ். மாவட்ட வேட்பாளர் காரளசிங்கம் பிரகாஸ் தெரிவிக்கையில்,
பாராளுமன்றில் எங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் எங்கள் குரலாக நீங்கள் ஓலிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் எங்களை தேர்வு செய்யப்படுவதன் ஊடாகவும் அனுர தோழர் ஊடாகவும் எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் போட்டியிடுகிறோம் உங்களுக்கு தேவையானவற்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
75 வருடமாக ஆட்சி செய்தவர்கள் இனவாநத்தை கக்கி இனவாத வெறியை ஏற்றி வந்தார்கள். ஆனால் எம்முடைய அட்சியில் அவ்வாறு நிகழப் போவதில்லை. அது மாறுபட்ட வகையில் இடம்பெறுகிறது.
நாட்டிலே இப்போது இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை போதைப்பொருள் பிரச்சினையாகும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எங்களுடைய சகோதரர்களை இந்த போதைப்பொருள் நாட்டுக்கு எவ்வாறு கொண்டு வரப்படுகிறது ஆட்சியில் உள்ள முன்னணி அரசாங்கத்தின் ஆதரவுடனே இடம்பெற்றது.
அதேபோல வாள்வெட்டு கும்பலும் இவ்வாறு செயல்பட்டது அவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரும் பிரச்சனை வேலை இல்லாப் பிரச்சனை வேலை இல்லாமையாலே அவர்கள் வாள்வெட்டுக்கு போகிறார்கள்.
இப்போது இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் வயித்தை வளர்க்கிறார்கள் அதேபோல அவர்கள் பல சொத்துக்களை சேர்த்து தாங்கள் வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள்.
நமது ஜனாதிபதி பாரம்பரிய வீட்டிலே வசித்து வருகிறார். அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் வாடகை வீட்டிலே வாசித்து வருகிறார்கள் ஆனால் தமிழ் அரசியல் வாதிகள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
நிறைவேற்று குழு உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்,
கடந்த கால தவறுகளில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டும். ராஜா ஜனாதிபதி தேர்தலில் கூட இது முக்கியமான தேர்தல் ஆகும் ஜனாதிபதி காலத்தில் அறிய முடியாத காரியங்கள் இருக்கின்றன உருவாக்க கூடிய இடமாக பாராளுமன்றம் இருக்கிறது.
எங்களுடைய நாட்டின் நீதி தேவைப்படுவது சிறுபான்மை மக்களுக்காகவே பணம், பொருள் படைத்தவர்களுக்கு அந்த நீதி தேவைப்படுவது இல்லை. அவர்களின் தன்மைக்கு ஏற்ப நீதிகள் மாறுபடுகின்றன.
சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பட்டங்களை இங்கே பயன்படுத்துகிறார்கள் நீதி என்பது எல்லோருக்கும் சமத்துவமாக கிடைத்தல் வேண்டும் இது சாதாரணமாக கிடைக்க வேண்டும். உமது நாட்டினுடைய சட்டங்கள் மிகவும் பழமையானது நமது நாட்டில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
அதாவது சாதாரண மக்களுக்காகவும் நீதிகள் சமமாக வழங்கப்பட வேண்டும் இதற்காகவே நாங்கள் பாராளுமன்றத்திற்கு நல்லவர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
உங்களுடைய பணம் மூன்று இடத்தில் இருக்கிறது உங்கள் பைல இருக்கிறது, வங்கியில் இருக்கிறது இன்னொரு திறைசேரியில் இருக்கிறது எனவே 14 ஆம் திகதி அந்த திறைசேரியின் திறப்பை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள்?
இதுவரை காலமும் அந்த திறப்பை படுகள்ளர்களுக்கு தான் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களிடத்தில் தான் அந்த திறப்பு இருந்தது அவர்கள் அந்த திறை சேரியை வழித்து துடைத்து விட்டார்கள் நீங்கள் ஏழையாகி விட்டீர்கள் இலங்கை அப்படியே இருக்கிறது.
வடமாகணத்திற்கு ஒரே ஒரு தீயணைப்பு வாகன மாத்திரம் தான் இருக்கிறது வடமாகாணத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதியிலே ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் தான் இருக்கிறது.
ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்க வருகின்ற போது அவர்களுக்கு பின்னாலே தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் என்பன போகின்றன.
ஆனால் வைத்தியசாலைகளில் அம்புலன்ஸ் இல்லை. தீயணைப்பு வாகனம் இல்லாத பிரச்சனை இருக்கிறது ஏனென்றால் அவர்கள் நாட்டை தீவைத்துக் கொண்டு செல்கிறார்கள் என்பதை இதிலிருந்து உணர முடிகிறது.
ஆனால் இப்போது பிரதமர் வருகின்ற பொழுது அவர் இரண்டு வாகனத்தில் வருகிறார் ஜனாதிபதியும் அவ்வாறே எதிர்வரும் பத்தாம் தேதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற பொழுது அவர் இரண்டு வாகனங்களில் மாத்திரமே வருகை தருவார் அதை நீங்கள் பார்க்க முடியும்.
எனவே இவ்வாறு செய்பவர்களுக்கு காசு எங்கிருந்து வருகிறது உங்களுடைய வரிப்பணத்தில் இருந்து அதாவது திறை சேரியிலிருந்து நிதியை வீண் விரயம் செய்கிறார்கள்.
இவ்வாறு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலே விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் தலைமையகத்திற்கு ஏனைய துறை சார்ந்தவர்களுக்கும் ஜனாதிபதி பணிபுரை விடுத்திருக்கின்றார்.
ஆனால் நீங்கள் யுத்தத்தினாலே 40 வருடங்களுக்கு மேல் பல துன்பங்களை அனுபவித்தீர்கள். யுத்தத்தால இடம்பெற்று அனைத்து வடுக்களையும் என்னால் தீர்க்க முடியாது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இருந்தாலும் எங்களால் இவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முடியும்.
லலித், குகன் இருவரையும் கொலை செய்தவை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முழுமையாக மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரப்பட்டுள்ளார்.
இப்போது பகுதியிலே பாதைகளை விடுவதற்காக ஆளுநர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது தீர்மானித்தார்களாம் இன்னும் சிறிது நாட்களிலேயே இப்போது உள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டிருக்காது. 35 வருடமாக நீங்கள் காணிகளை விட்டு வெளியில் இருக்கின்ற பொழுது அந்த வேதனை எங்களுக்கு தெரிகிறது.
யுத்தத்தின் காரணமாக அந்த பாதைகள் மூடப்பட்டிருந்தன அதனை அப்படியே தொடர்ச்சியாக 15 வருடங்கள் முடித்து விட்டார்கள் அந்த இடத்தின் பரம்பரை உரிமையாளர்கள் நீங்கள் நாங்கள் வாக்குகளை பெறுவதற்காக அப்படி கூறவில்லை இந்த இடத்தின் பிரச்சினைகளை எமது ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறார்.
இதே போல கிளிநொச்சியில் இருக்கின்ற விளையாட்டு மைதானம் ஒன்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலே உள்ளது. நாங்கள் ஜனாதிபரிடம் பேசி இருக்கின்றோம் அவை தொடர்பான முடிவுகளை விரைவில் எடுப்போம்.
தற்போது டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்து அமைச்சுப் பதவி தருவதாக கூறுகிறார் அதே போல சுமந்திரன் ஸ்ரீதரன் ஆகியோரும் ஜனாதிபதியை சந்தித்து தமது நண்பர்கள் ஆதரவாளர்களுக்கு ஜனாதிபதி நமக்கு அமைச்சர் பதவி தருவதாக கூறுகின்றனர்.
கடந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவர்களை ஆதரித்து ஊழலுக்கு துணை போன எவருக்கும் நமது ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
--