வடக்கு
இனத்தின் விடுதலைக்காக வாக்களியுங்கள்!

Nov 10, 2024 - 12:58 PM -

0

இனத்தின் விடுதலைக்காக வாக்களியுங்கள்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரபகுதியில் நேற்று (09) பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.

 

வைரவபுளியங்குளம் பகுதியில் ஆரம்பமாகிய குறித்த பிரச்சாரநடவடிக்கைகள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது கூட்டணியின் வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பெருமளவான தொண்டர்கள் பங்கெடுத்திருந்தனர்.

 

இதன் போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,

 

இந்த அரசாங்கம் தங்களது சுய ரூபத்தை படிப்படியாக வெளிப்படுத்தி வருகின்றது.முதலில் ஜநா தீர்மானத்தை ஏற்க முடியாது என்றார்கள்,13 திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றார்கள்,இன்று சமஸ்டிக்கு எதிராக பேசுகின்றனர்.

 

இடதுசாரித்துவ கட்சிஎன்று தங்களை கூறிக்கொண்டு சிங்களதேசியவாத கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒரு நிலையே அவர்களிடம் உள்ளது. எமது மக்கள் பல இழப்புக்களை தாண்டிவந்துள்ளனர். எனவே இனத்தின் விடுதலைக்காக மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05