செய்திகள்
தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Nov 10, 2024 - 02:54 PM -

0

தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நாளை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

 

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

தற்போது, ​​வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக அலுவலகங்களை அமைத்துள்ளனர்.

 

அந்த அலுவலகங்களில் தொகுதி அளவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும் வரும் 12ம் திகதி நள்ளிரவு முதல் அகற்றப்பட வேண்டும்.

 

நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு ஒரு தொகுதியில் ஒரு தேர்தல் அலுவலகத்தை மாத்திரமே வைத்திருக்க முடியும்.

 

மேலும், அந்த திகதியில் இருந்து, வேட்பாளர்கள் தொகுதிக்கு ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்க முடியும்.

 

அத்துடன் வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக பராமரிக்கலாம்.

 

ஆனால், அந்த அலுவலகங்களில் எதுவும் அலங்கரிக்கவோ அல்லது வேறு எந்த பிரச்சார பணிகளைச் செய்யவோ முடியாது" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05