Header Logo
Mogo Academy

ஏனையவை
புத்தளத்தில் 23,689 பேர் பாதிப்பு!

Nov 10, 2024 - 04:15 PM -

0

புத்தளத்தில் 23,689 பேர் பாதிப்பு!
Mobitel inner

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6,832 குடும்பங்களைச் சேர்ந்த 23,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, மஹாவெவ, ஆராச்சிக்கட்டுவ, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 74 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6,832 குடும்பங்களைச் சேர்ந்த 23,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இங்கு 12 கிராம சேவகர் பிரிவுகளில் 4,016 குடும்பங்களைச் சேர்ந்த 13,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 1,501 குடும்பங்களைச் சேர்ந்த 5,846 பேரும், கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 395 குடும்பங்களைச் சேர்ந்த 1,335 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  15 கிராம சேவகர் பிரிவில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 748 பேரும் மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 214 பேரும் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 868 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  03 கிராம சேவகர் பிரிவுகளில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

முந்தலில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேரும், புத்தளத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன அந்தந்த பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara