வடக்கு
மக்கள் ஆணையை வழங்க வேண்டும்!

Nov 10, 2024 - 05:52 PM -

0

மக்கள் ஆணையை வழங்க வேண்டும்!

பாராளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றதும் நானே தமிழரசின் தலைவராக பொறுப்போற்பேன் என பாரளுமன்ற தேர்தலின்  யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (09) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கான இந்த பயணத்தில் தேர்தல் என்பது ஒரு முக்கிய புள்ளியாக மாறுகின்றது. அந்த முக்கிய புள்ளிகளாக இருக்கின்ற தேர்தல் காலங்களில் மக்களின் ஆணை திரும்ப திரும்ப வழங்கப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது.

அந்த வகையில் எதிர்வரும் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் வாழ்வை தெரிவு செய்வதற்கான களமாக ஆணை வழங்கின்ற தேர்தலாக இந்த தேர்தல் அமைகின்றது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05