Nov 10, 2024 - 06:02 PM -
0
தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில் அதை ஒழிக்கும் முயற்சியில் தமிழக அரசும் பல சோதனைகளை செய்து வருகிறார்கள்.
போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு கல்லூரிகளில் விற்கப்பட்டு வருவதை அடுத்து சமீபத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவ்வழக்கில் சீரியல் நடிகை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை மீனா என்பவர் சுந்தரி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
சிறுசிறு ரோலில் நடித்து வரும் நடிகை மீனா, சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ராயப்பேட்டை அருகே போதைப்பொருளுடன் சிக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 7-வது நுழைவுவாயில் 5 கிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடருடன் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
போதை பொருளை பறிமுதல் செய்த பொலிஸார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சின்னத்திரை துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா (வயது 28) என்பது தெரியவந்தது.
தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது.
'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து அவரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
துணை நடிகை மீனாவுக்கு 15-ம் திகதி வரை நீதிமன்ற காவல் வைக்கும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.