செய்திகள்
தேர்தல் காலத்தில் மற்றுமொரு விசேட வேலைத்திட்டம்!

Nov 10, 2024 - 08:02 PM -

0

தேர்தல் காலத்தில் மற்றுமொரு விசேட வேலைத்திட்டம்!

பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் விசேட பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்வரும் 12ம் திகதி முதல் இந்த பிரிவின் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும், தேர்தலுக்குப் பின்னரும் 05 நாட்களுக்கு தேர்தல்கள் செயலகத்துடன் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி மேலும் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05