Header Logo

கிழக்கு
சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள்!

Nov 10, 2024 - 10:11 PM -

0

சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவர்களான ப்ராங்க் மிலன் லியோன், ரோஹித், யானுவர்ஷன் மற்றும் ஜோனதன் போன்றோர் கடந்த பல மாதங்களாக AI தொழில்நுட்பத்தின் பல்வேறு வாய்ப்புகளைப் பற்றி தேடிக் கற்று அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அலுவலக ரீதியிலான நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இதன்போது நான்கு மாணவர்களும் இணைந்து நடுவர்கள் வழங்கிய போதைப்பொருள் அற்ற உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி, அதை AI தொழில்நுட்பத்தின் மூலம் பாடலாக மாற்றி, அதே இடத்தில் வெளியிட்டனர். 

4 நிமிடங்கள் மற்றும்‌ 23 நொடிகளில்  மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்தனர் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் முகமது ஃபர்ஸான் போன்றோர். 

சோழன் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களும் இணைந்து சோழன் உலக சாதனை படைத்த நான்கு மாணவர்களுக்கும் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் நான்கு மாணவர்களையும் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title