Nov 11, 2024 - 11:38 AM -
0
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல் மோசடி செய்த பல மோசடிக்கு சொந்தகாரர்களும் படுகொலை செய்தவர்களும் பல படுகொலைக்கு காரணமாக இருந்ததுடன் ஆலயங்களுக்குள்ளே குண்டுவைத்த மோசடியாக பெற்ற பணத்தை மக்களுக்கு செலவு செய்துவரும் மோசடிகாரர்களுக்கும் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக வாக்குகளை பிரிக்க களமிறக்கப்பட்ட சுயேச்சைக்குழுக்களுக்கும் வாக்களிக்க போகின்றீர்களா? மக்களே சிந்தியுங்கள் என சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகாரியாலயத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய நல்ல திறமையான நேர்மையான ஆரோக்கியமுள்ள ஊழல் மோசடி அற்ற பிரதிநிதியை தெரிவு செய்கின்றதற்காகவே இந்த தேர்தல் நடாத்தப்படுகின்றது.
இந்த தேர்தலில் மாவட்டத்தில் திறமையானவர்களையும் நல்லவர்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை தெரிவு செய்ய மக்கள் தயாராக இருக்கின்ற வேளையில் பல ஊழல் மோசடி செய்த பல படுகொலைகளை செய்தவர்கள் 14 ஆம் திகதி நடக்கப் போகும் தேர்தலில் அந்த மோசடி செய்த பணத்தை மக்களுக்கு செலவு செய்து வருகின்றனர்.
தமிழர்கள் உரிமை தொடர்பாக மாவட்டத்திலுள்ள தமிழ் அனைத்து குடும்பங்களும் ஏதோ ஒருவகையில் உயிரூட்டியது உயிர் தியாகம் செய்ததுடன் பொருள்சேதம் மற்றும் பல இழப்புக்களை தமிழர்கள் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு தனிநபர்களும் சந்தித்தனர்.
இந்த நிலையில் இந்த மோசடிகாரர்கள் உங்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு எவ்வளவு மோசடி செய்ய முடியுமே அனைத்து மோசடிகளையும் செய்து குண்டுகளையும் வைத்து படுகொலைகளையும் செய்துள்னர்.
எனவே, இப்படிப்பட்ட மோசடி செய்த வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க போகின்றீர்களா? அல்லது தேர்தலில் மிகவும் திறமையான நேர்மையாக தமிழ் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய பிரதி நிதியை தெரிவு செய்வதற்காக கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குறுக்காளே புகுந்து வாக்குகளை பிரிப்பதற்காக ஈடுபடுகின்ற சுயேச்சைக்குழுக்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா?
எனவே, இவ்வாறனவர்களுக்கு வாக்களிப்பின் ஊடாக மாவட்டத்தில் பெறக்கூடிய 4 தமிழ் பிரதி நிதிகளை நாங்கள் இழப்போம். எனவே இழப்பதற்கு எந்தவொரு தமிழனும் சம்மந்தப்பட்டவராக இருந்து விடமாட்டார்கள் என நான் நம்புகின்றேன். அதன டிப்படையில் நான்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற சிறப்பான செய்திகளை 15 ஆம் திகதி வழங்குவார்கள்.
தமிழ் தேசியத்தின் பால் இந்த மாவட்ட மக்கள் செய்த தியாகங்கள் என்பது விலைமதிக்க முடியாதது அப்படிப்பட்ட தமிழ் குடும்பங்களில் தமிழ் தேசியத்தை உடைத்து சின்னா பின்னமாக்கி அதை பலவீனப்படுத்துவதற்காக மேற்கொள்ள ப்பட்டுவரும் சதியை முறியடிப்பதற்கு சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதன் ஊடாகவே அந்த சதியை உங்களால் முறியடிக்க முடியும் தமிழ் தேசியத்தை பாதுகாக்க முடியும்.
எனவே எதிர்காலத்தில் மாவட்டதில் சிறப்பான செயற்திட்டங்களை அமுலாக்கவும் சரியான திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கும் திட்ட மிட்டவாறு அபிவிருத்தி வேலைகளை செய்வதற்கும் சங்கு சினம் ஊடாக இந்த மக்களிடம் ஆணைகேட்டு நிற்கின்றோம். அந்த ஆணைகளை வழங்கும் பட்சத்தில் நாங்கள் பேரம் பேசும் சகத்தியாக வலுப்பெற முடியும் எனவே சங்கு வலுப்பெற மக்கள் வழங்குகின்ற ஆதரவுகளை கேட்டு நிற்கின்றோம்.
இந்த ஆணைகேட்டு நிற்பது எங்களது தனிப்பட்ட விடையத்துக்கு அல்ல மக்களின் நேர்மையான விடையத்தை செய்து முடிப்பதற்கும் சரியான கொள்கைகளையும் தேவையான அதிகாரங்களை அமுல்படுத்துவற்கும் சர்வதேச ரீதியான விடையங்களை பேசுவதற்கும் நாங்கள் ஒரு அங்கீகாரத்தை கேட்டு நிற்கின்றோம்.
ஆகவே இந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு வாக்குகளையும் சங்கு சின்னத்துக்கும் எனது 5ம் இலக்கத்துக்கும் வாக்களிப்பதன் ஊடாக அங்கீகாரத்தை பெறுவதன் ஊடாக நல்ல செயற்திட்டங்களை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்.
அதேவேளை கடந்த காலத்தில் தேர்தலைகேட்டு பல மோசடிக்கு சொந்தகாரர்களாக இருக்கின்ற பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக உடந்தையாக இருந்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? தமிழர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? அல்லது நல்ல செயற்திட்டங்களையும் தமிழ் தேசியத்தை பாதுகாக்க செயற்திட்டம் உள்ளவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க போகின்றீர்களா?
அல்லது தற்போது ஆட்சி பீடம் ஏறிய ஜேவிபி கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான 5 செயற்திட்டங்களை தீட்டியுள்ளனர் அதில் முள்ளிவாய்கால் படுகொலையை சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளை விசாரிக்க முடியாது எனவும், கடந்த 2006 ஜூன் 30 ஆம் திகதி இணைந்திருந்த வடகிழக்கை இரண்டாக நீதிமன்றம் ஊடாக பிரித்ததுடன் வடக்கு கிழக்கை அழிப்பதற்காக இராணுவத்திற்கு படைபடையாக இளைஞர்களை சேர்த்து கொடுத்து தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன் கடந்த கால அமைச்சரவை தீர்மானித்த சம்பள அதிகரிப்பை விடையங்களை அமுல்படுத்தாமல் இருக்கின்றதுடன் வடக்கு கிழக்கில் வெளிநாடுகள் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்களை வெளிநாடு தலையிடக்கூடாது என அதனை நிறுத்துவதற்கான முயற்சித்துவரும் இந்த அரசு இலங்கை அணிசோர நாடுகள் என சொல்லிக் கொண்டு அம்பாந்தோட்டையையும் கொழும்பையும் சீனாவுக்கு விற்றுவிட்டு ஏனைய நாடுகளை வரக்கூடாது நாங்கள் அணிசேர நாடுகள் என சொல்லிக் கொண்டு இனவாம் இல்லை என்று தெரிவித்துக் கொண்டு இனவாத செயலை செய்துவருகின்ற இந்த கட்சிக்கு வாக்களிக்க போகின்றீர்களா?
கடந்த காலத்தில் வாக்களித்த எங்கள் வாக்குகளை வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட தற்போது உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா? மக்களே சிந்தியுங்கள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான சின்னம் சங்கு எனவே சங்கு சின்னத்துக்கும் எனது 5 இலக்கத்துக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
--