Nov 11, 2024 - 12:04 PM -
0
மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தாக்கல் செய்திருந்த பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுவை பரிசீலித்த தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்படி தினம் இந்த மனு தொடர்பான உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.