செய்திகள்
பெண் ஒருவர் கொடூரமாக கொலை - கணவன் தப்பியோட்டம்

Nov 11, 2024 - 01:51 PM -

0

பெண் ஒருவர் கொடூரமாக கொலை  - கணவன் தப்பியோட்டம்

முந்தளம் - மஹமாஎலிய பிரதேசத்தில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலம் வீட்டுக்கள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முந்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மங்களஎலிய, மஹமாஎலிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகநபர் வௌியிட்டனர்.


எனினும், வீட்டின் அறையில் பெண் கிடப்பதை அவரது பாட்டி பார்த்துள்ளார். மேலும், அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


பெண்ணின் தலை தாக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த பெண்ணின் அடையாள அட்டையை எடுத்துச் சென்றுள்ளதாகவும், கொலைச் சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முந்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைக்காக கொலை நடந்த இடத்திற்கு வந்த புத்தளம் பதில் நீதவான் இந்திக தென்னகோன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். 

Comments
0

MOST READ
01
02
03
04
05