செய்திகள்
கடன் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!

Nov 11, 2024 - 10:36 PM -

0

கடன் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி வௌியிட்ட தகவல்!

டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கம்பஹாவில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

"இப்போது அது முழுவதுமாக முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தொகை பாக்கி இருக்கிறது. 2028-ல் கடனை செலுத்தத் தொடங்குவோம். 2028ல் செலுத்த வேண்டிய கடனை கணக்கிட்டுள்ளோம்.
அந்தக் கடனை அடைக்கக் கூடிய பொருளாதாரத்தை அரசால் உருவாக்க முடியும். பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு IMF குழு இலங்கை வருகிறது. அதன்பின் 3வது பரிசீலனையை முடித்து, அந்த பணியை ஜனவரி இறுதிக்குள், பிப்ரவரி மாத ஆரம்பத்தில் முடிப்போம். அப்போதுதான் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைய முடியும்."

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05