Nov 12, 2024 - 11:33 AM -
0
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லொக்கி பெர்குசன் இலங்கை-நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியில் பெர்குசனுக்கு பதிலாக எடம் மில்னே அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை (13) முதல் ஆரம்பமாக உள்ளது.
அதன் முதல் போட்டி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பெர்குசன் ஹெட்ரிக் விக்கெட்க்களை வீழ்த்தியிருந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசும்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.