Nov 12, 2024 - 12:57 PM -
0
குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்லப்பிட்டிய ஜனபதய பிரதேசத்தில் உள்ள தேயிலை மலையில் இன்று (12) காலை சிறுத்தை ஒன்று தேயிலை மரத்தில் உள்ள கம்பியில் சிக்கி இருந்தது.
இதனை தொடர்ந்து கம்பளை வனஜீவ அதிகாரிகள் மற்றும் குறுந்துவத்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு ரந்தெனிகல வனஜீவ வைத்தியர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மயக்கம் அடைய செய்து கூட்டில் அடைத்து கொண்டு சென்றனர்.
--