Nov 12, 2024 - 03:07 PM -
0
களனிப் பல்கலைக்கழகத்தின் Rotaract கழகம் ஏற்பாடு செய்திருந்த 'அபிமன்' விருது வழங்கும் விழாவில் யூடியூப் தளத்தில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செனலாக 'டிவி தெரண' வும் , மிகவும் பிரபலமான செய்தி வழங்குநராக 'அத தெரண' வும் விருதுகளை வென்றுள்ளன.
இலங்கையில் புதிய டிஜிட்டல் மீடியா படைப்பாளிகள் மற்றும் உள்ளடக்க படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கும் விழா நேற்று (11) களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையின் டிஜிட்டல் துறையில் சாதித்த சிலர் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.