செய்திகள்
இலங்கை அணிக்கு பயிற்சி ஆலோசகர் நியமனம்!

Nov 12, 2024 - 04:42 PM -

0

இலங்கை அணிக்கு பயிற்சி ஆலோசகர் நியமனம்!

 தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சிறந்த துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அதன்படி அவர் இலங்கை அணியின் சில வீரர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

 

இதற்கமைய, இலங்கை அணியின் வீரர்கள் சிலர் போட்டிக்கு முந்தைய பயிற்சிக்காக நேற்றிரவு (11) தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டனர்.

 

 தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, கசுன் ராஜித மற்றும் லசித் அமுதேனிய ஆகிய வீரர்களே இவ்வாறு தென்னாபிரிக்கா சென்றுள்ளனர்..

 

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் திகதி டர்பனில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05