வடக்கு
26 லீற்றர் கசிப்பினை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது!

Nov 12, 2024 - 06:05 PM -

0

26 லீற்றர் கசிப்பினை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது!

26 லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் இவ்வாறு தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை சோதனையிட்ட பொழுது சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை பொலிஸார் பறி முதல் செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை இன்று (12) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05