செய்திகள்
அரசியல் வினாக்களுடன் கூடிய வினாத்தாள் குறித்து விசாரணை ஆரம்பம்!

Nov 12, 2024 - 06:59 PM -

0

அரசியல் வினாக்களுடன் கூடிய வினாத்தாள் குறித்து விசாரணை ஆரம்பம்!

பாடசாலை தவணைப்பரீட்சை வினாத்தாள் ஒன்றில் அரசியல் ரீதியிலான வினாக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

 

களுத்துறை மாவட்ட சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணைப் பரீட்சையில் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதாரண பொதுப் பரீட்சையில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படுகிறது.

 

இந்த வினாத்தாள் சம்பந்தப்பட்ட பாடசாலையினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கும் தொடர்பில்லை எனவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05