வடக்கு
12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Nov 12, 2024 - 07:06 PM -

0

12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இன்று (12) அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு மயிலிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05