Nov 13, 2024 - 04:18 PM -
0
நாளை (14) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான விடுமுறையை தனியார் மற்றும் வங்கித்துறையில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து வாக்காளர்களும் தமது இறையாண்மை அதிகாரத்தை பிரயோகிக்க தமது வாக்கை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் வாக்குரிமைப் பெற்ற அனைத்து உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கும் தமது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அது தொடர்பில் மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அத தெரணவிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“நாளைய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளைக் அளிக்கும் அனைத்து தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறையிலும் பணிபுரியும் ஊழியங்களுக்கு விடுமுறை வழங்குமாறு கோரப்படுகிறது.
தயவு செய்து தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்கள் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை அளிக்க அனுமதிக்கவும்.
தூரத்திற்கு ஏற்ப விடுமுறை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"என்றார்.
மேலதிக விபரம்..