Nov 14, 2024 - 08:07 AM -
0
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமான நிலையில் நாடு பூராகவும் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் தொலைக்காட்சி, வானொலி, கையடக்க தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாக உங்களுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெரண ஊடக வலையமைப்பு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக அத தெரண தேர்தல் சிறப்பு நேரலை ஔிபரப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இறுதி தேர்தல் முடிவு வரை நேரடியாக அனைத்து தகவல்களையும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் ஊடாகவும் நீங்கள் கண்டு களிக்கலாம்.
எமது இணையத்தளமான Tamil.adaderana.lk ஊடாக தொடர்ந்து நீங்கள் இணைந்திருந்தால் தேர்தல் முடிவுகளையும் தேர்தல் தொடர்பான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.