செய்திகள்
லக்கல-எலவனகந்த பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து

Nov 14, 2024 - 09:23 PM -

0

லக்கல-எலவனகந்த பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து

மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று (14) மாலை பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த விபத்து இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - மஹியங்கனை வீதியின் எலவாகந்த பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.

 

அப்போது பஸ் மண்மேடு ஒன்றின் மீது மோதி கவிழ்ந்தது.

 

பஸ்ஸில் பயணித்த 37 பேரும் வேனில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்து வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் பஸ்ஸில் இருந்த இருவர் மற்றும் வேனில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05