வடக்கு
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!

Nov 16, 2024 - 03:49 PM -

0

ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!

எங்களுக்கு வெற்றி வாகை வந்து இருக்கலாம் ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது. இங்கே காலம் காலமாக இருந்தவர்கள் அந்த அலையில் வீசப்பட்டு விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

 

இன்று (16) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். நான் வந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவதற்காக இதை செய்யவில்லை தமிழ் தேசியத்திற்காக தான் சுயேட்சையாக கேட்கப்பட்டது.

 

தேசியப்பட்டியல் ஆசனம் ஒரு போதும் எனக்கு வேண்டாம் என கூறிய சுமந்திரன், ஆனால் மத்திய குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார். மத்திய குழுவை நடத்தி செல்வதே சுமந்திரன் தான் என தெரிவித்தார். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05