Nov 16, 2024 - 04:59 PM -
0
அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.
"கண்டி மாவட்ட மக்களின் முடிவுக்கு தலைவணங்குகிறேன். அதன்படி, அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். "