செய்திகள்
பொதுத் தேர்தல் குறித்த கண்காணிப்பு அறிக்கை கையளிப்பு!

Nov 16, 2024 - 06:44 PM -

0

பொதுத் தேர்தல் குறித்த கண்காணிப்பு அறிக்கை கையளிப்பு!

பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

 

இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இம்முறை பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக நாட்டிற்கு வருகை தந்திருந்தது.

 

அதன்படி, தேர்தலுக்கு முந்தைய காலம், தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியில் தங்கள் அவதானிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05