செய்திகள்
வௌிநாட்டு பெண் ஒருவர் துஷ்பிரயோகம்!

Nov 16, 2024 - 06:45 PM -

0

வௌிநாட்டு பெண் ஒருவர் துஷ்பிரயோகம்!

அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ரஷ்ய பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

41 வயதான ரஷ்ய பெண் ஒருவர் அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 8ஆம் திகதி வந்து தங்கியிருந்துள்ளார்.

 

வங்கி ஊழியரான குறித்த பெண்ணின் பிறந்த நாள் நவம்பர் 12ஆம் திகதி இருந்துள்ளது.

 

இந்நிலையில், தனது பிறந்தநாள் தினத்தில் அதிகமாக குடித்து கொண்டாடிவிட்டு விடுதியின் அறையில் உறங்கச் சென்றுள்ளார்.

 

இதன்போது, தனது அறைக்கு வந்த ஒருவர், தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் பெண் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

 

குறித்த ஹோட்டலில் பணிபுரியும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05