சினிமா
யோகி பாபு பட இயக்குனர் இளம் வயதில் மரணம்!

Nov 16, 2024 - 08:29 PM -

0

யோகி பாபு பட இயக்குனர் இளம் வயதில் மரணம்!

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. அவர் அடுத்து யோகி பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

 

இந்நிலையில் இயக்குனர் சுரேஷ் சங்கையா உடல்நல குறைவால் மரணமடைந்து இருக்கிறார் என்கிற செய்தி சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

 

சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.

 

சுரேஷ் சங்கையாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05