Nov 16, 2024 - 09:38 PM -
0
எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக் கூடியவர் நடிகர் கஸ்தூரி.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கஸ்தூரி மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருநகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே கஸ்தூரி முன்ஜாமீன் கோர, அவரது பேச்சில் வெறுப்புணர்வு உள்ளதால் முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.