செய்திகள்
இன்றும், நாளையும் சிறப்பு ரயில் சேவைகள்!

Nov 17, 2024 - 08:18 AM -

0

இன்றும், நாளையும் சிறப்பு ரயில் சேவைகள்!

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு வரும் பயணிகளுக்காக சில சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்றும் நாளையும் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, 7 சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

 

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இயங்குகின்றன.

 

அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஹிக்கடுவை வரையிலும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05