வடக்கு
தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்!

Nov 17, 2024 - 12:00 PM -

0

தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்!

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

 

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05