செய்திகள்
படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது!

Nov 17, 2024 - 12:32 PM -

0

படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது!

வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த சந்தேக நபர் இந்நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் படோவிட அசங்கவின் உதவியாளர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மொரட்டுவ முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் படோவிட, கல்கிஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் 65 வயதுடைய கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

அவரிடமிருந்த 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05