மலையகம்
விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Nov 17, 2024 - 01:29 PM -

0

விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் இதன் படி நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம்  முதல் நேற்று (16) நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்.

 

ஐயப்பன் கடவுளின் தரிசனம் செய்வதற்கு  பக்தர்கள் நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்தில் விரதம் இருந்து  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சரணம் கோஷமிட்டு குருசாமி கைகளால் மாலை அணிந்து கொண்டனர்.

 

ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம் இதற்காக கார்த்திகை மாதப் பிறப்பைத் தொடர்ந்து நானுஓயா கிளரண்டன் பிரதேசம் முழுவதிலும் உள்ள  ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

 

தொடர்ந்து ஆலயத்தில் ஐயப்ப பஜனை நடைபெற்ற பின் பூஜையில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05