வடக்கு
தேசிய மக்கள் சக்திக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கிறது!

Nov 17, 2024 - 04:10 PM -

0

தேசிய மக்கள் சக்திக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கிறது!

தேசிய மக்கள் சக்திக்கு பாரிய பொறுப்புக்கள் நிச்சயமாக இருக்கிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

இன்று (17) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இலங்கையில் முதல் தடவையாக ஒரு இடதுசாரி சிந்தனைகளை கொண்ட ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை அவரது கட்சி பெற்று கொண்டுள்ளது.

 

இதன் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு பாரிய பொறுப்புக்கள் நிச்சயமாக இருக்கிறது. ஆகவே இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை செய்ய முயற்சி செய்வார்களா இருந்தால் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

 

தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முன்னுரிமை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

 

தமிழ் மக்கள் இவர்கள் மீது ஒரு நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05