Nov 17, 2024 - 07:12 PM -
0
பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. சூர்யாவின் திரைவாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தை, காண ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் கண்டிப்பாக இது எமோஷனலாகவும், கமர்ஷியகவும் பட்டையை கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்க, வசூலும் சற்று சரிவை சந்தித்துள்ளது. முதல் நாள் மாபெரும் வசூல் வேட்டையாடிய கங்குவா படம், அடுத்தடுத்த நாட்களில் குறைய துவங்கியுள்ளது.
இந்த நிலையில், 3 நாட்களில் கங்குவா படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.