செய்திகள்
இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

Nov 17, 2024 - 08:24 PM -

0

இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரியவருகிறது.


குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதன்போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.


இதை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா உறுதிபடுத்தினார்.


இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05