செய்திகள்
பசறை - பிபில வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

Nov 18, 2024 - 09:47 AM -

0

பசறை - பிபில வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

பதுளை - பசறை லுனுகல A5 வீதியின் ஒத்தேகடை பகுதியில் நிலச்சரிவு காரணமாக வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.


மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் சுமார் 60 மீற்றர் பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.


வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பதுளையில் இருந்து பிபில, மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை, மஹாஓயா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.


இன்று (18) அதிகாலை 2.45 மணியளவில் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மண்சரிவினால் பாரியளவில் சேதமடைந்துள்ளன.


முச்சக்கர வண்டி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தற்போது வீதி அபிவிருத்தி அத்தியட்சகர் பசறை பிரதேச சபை பொலிசார் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05