Nov 18, 2024 - 11:05 AM -
0
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, 21 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்கள் இதோ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பாதுகாப்பு, பண திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு
விஜித ஹேரத் - வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்
சந்தன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு
சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
லால் காந்த - கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்
அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
ராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
சுனில் ஹந்துன்னெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள்
பிமல் ரத்னாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரம், வெகுசன ஊடகம்
சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு
சுனில் குமார கமகே - விளையாட்டு, இளைஞர் விவகாரம்
வசந்த சமரசிங்க - வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
கிருஷாந்த சில்வா அபேசேன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
அனில் ஜயந்த பெர்னாண்டோ - தொழில்
குமார ஜயகொடி - வலுசக்தி
தம்மிக்க பட்டபெந்தி - சுற்றாடல்