செய்திகள்
சுஜீவ சேனசிங்கவின் V8 கார் - இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல்

Nov 18, 2024 - 01:26 PM -

0

சுஜீவ சேனசிங்கவின் V8 கார் - இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல்

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான 10 கோடி பெறுமதியான V8 சொகுசு கார் தொடர்பில், இன்று (18) இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றுக்கு கிடைக்காததால் இது தொடர்பில் நினைவூட்டல் கடிதத்தை வழங்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.


இந்த வாகனம் தொடர்பில் செட்டிகுளம நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த போதிலும், குறித்த வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக சுஜீவ சேனசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த வாகனத்தை சுஜீவ சேனசிங்கவிடம் விடுவிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.


காரணிகளை பரிசீலித்த கோட்டை நீதவான், இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெறாததால், சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05