Nov 18, 2024 - 05:59 PM -
0
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜித ஹேரத் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வெளிவிவகாரஅமைச்சகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இவர் முன்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.
அத்துடன் அவர் முன்னதாக 2004-2005 இல் அப்போதைய அரசாங்கத்தில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராக பணியாற்றியிருந்தார்.