செய்திகள்
ரயிலில் பயணித்த இளைஞர் சமிக்ஞை கம்பத்தில் மோதி பலி!

Nov 19, 2024 - 09:56 AM -

0

ரயிலில் பயணித்த இளைஞர் சமிக்ஞை கம்பத்தில் மோதி பலி!

ரயில் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

 

நேற்று (18) காலை, பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் பயணித்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 

கணேமுல்ல தெனிய வீதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05