Nov 19, 2024 - 11:42 AM -
0
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று (18) நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகித்தது.
3ஆவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாகிஸ்தான் அணி சர்பாக, 41 ஓட்டங்களை பெற்றதன் மூலம் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 2 ஆம் இடம் பிடித்தார்.
டி20I கிரிக்கெட்டில் 151 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,231 ஓட்டங்களை குவித்த ரோகித் சர்மா அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 119 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,192 ஓட்டங்களை குவித்து பாபர் அசாம் 2 ஆம் இடமும் 117 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,188 ஓட்டங்களை குவித்து விராட் கோலி 3 ஆம் இடத்தில் உள்ளார்.