Nov 19, 2024 - 03:59 PM -
0
என்னுடைய முடிவை நான் மிக தௌிவாக எடுத்து சொல்லி இருக்கிறேன். அடுத்த ஐந்து வருடம் பாராளுமன்றத்தில் இரண்டாவது இடத்திற்கு வர தேசியப்பட்டியல் ஊடாக அனைத்து விடயங்களும் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதே சமயம் நாட்டை மீட்டு எடுத்தவர்களுக்கு தான் தெரியும் நாட்டை அதே பாதையில் கொண்டு செல்வதற்கு அதனால் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.
என்னுடைய அபிப்ராயம் காஞ்சன விஜேசேகரவிற்கு வழங்க வேண்டும் என்பது, நாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். நாட்டில் தற்பொழுது இருக்கும் அரசாங்கம் எப்படி செயல்படும் என்பது கூற முடியாது. ஆகையால் காஞ்சன விஜேசேகரவிற்கு கட்டாயம் இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.