செய்திகள்
ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

Nov 20, 2024 - 02:13 PM -

0

ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த 11ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற முறுகல்நிலை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஹரின் பெர்னாண்டோ இன்று காலை பதுளை பொலிஸில் முன்னிலையாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தார்.

 

அண்மையில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளை நகரில் '10'ஆம் இலக்கம் கொண்ட சட்டைகளை அணிந்து கொண்டு நடமாடியதால் பொலிஸாருடன் முறுகல்நிலை ஏற்பட்டது.

 

அவர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் 10ஆம் இலக்கத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05