செய்திகள்
70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி

Nov 20, 2024 - 04:55 PM -

0

70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி

குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.


அதற்கமைய, நாட்டு அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.


இதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05