Nov 20, 2024 - 05:48 PM -
0
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (20) இடம் பெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி, பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
--